Who We Are

Welcome To Om Shri Sai Baba Temple Tiruvottiyur


"OM Sai Ram !!! OM Sai Ram !!! OM Sai Ram !!!"

ஜெய் சாய் ராம் இறையடிகளார்க்கு வணக்கம் , வடசென்னையை சேர்ந்த திருவொற்றியூரில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவிலை பற்றியும் , ஆலயம் உருவான வரலாறு பற்றியும் இங்கு சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியும் இங்கு நடைபெறும் நான்கு வேளை ஆரத்தி பற்றியும் , இந்த வலைதளத்தில் பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் . ஆலயத்தை பற்றிய தகவல்களை கீழ் காண்போம் . இந்த ஆலயம் உருவான வரலாறு : பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு எண்பர் அவ்வாறு இக்கோயில் உருவாக பின்னனியில் விநாயகர் வழிபாடு இருக்கிறதுஇ இந்த ஆலயத்தின் ஸ்தாபகர் திரு . ராமமூர்த்தி அவர்களின் மனைவி விநாயகருக்கு அருகம்புல் மாலை எடுத்து செல்ல காகிதத்தை தேடினார் . அந்த சமயம் நாளிதழின் ஒரு பகுதி அவர் வசம் வந்தது , அதில் சீரடி சாய்பாபவின் அற்புதம் பற்றி அச்சடிக்க பட்டு இருந்தது . மேலும் அதில் ஆந்திராவில் உள்ள சாய்பாபா கோவில் கட்டுமான பணி நடைபெறுவதாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது . அதை திரு . ராமமூர்த்தி அந்த ஆலய பணிக்காக தன்னால் இயன்ற ரூ . 51 - ஐ Money Order செய்தார் . அதற்கு ஆந்திரா ஆலய சார்பில் யந்திரம் ஒன்று தபால் மூலம் ராமமூர்த்தி அவர்களுக்கு அனுப்பப்பட்டது . அதை வியாழன் தோறும் ' ராமமூர்த்தி பூஜிக்க ஆரம்பித்தார் அவரது பக்திக்கு பரிசாக சாய்பாபா அவரது வாழ்வை மேன்மை அடைய செய்தார் . பின் ஒரு நாள் கனவில் சாய் பாபா அவரது இல்லத்திற்குள் நுழைவது போல் கண்டார் . அதன் பிறகு ராமமூர்த்தி அவர்கள் சாய்பாபா விக்ரகம் வாங்கி மயிலையில் பூஜை செய்து சாய் அடிகளார்கள் வழிபடும் வகையில் தனது

இல்லத்தின் ஒரு பகுதியில் 2002 ஆம் ஆண்டு மார்ச் 18 - ம் தேதி மூலவரான சாய்பாபாவை பிரதிஷ்டை செய்தார் . அவர் பிரதிஷ்டை செய்த சாய் பாபாவை நாள்தோறும் பொது மக்களும் . சாய் அடியார்களும் வழிபட தொடங்கினர் . பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு சாய் அடியார்கள் வியாழன் தோறும் அன்னதானம் செய்யவும் தொடங்கினர் .


கூட்டு பிரார்த்தனை:

வியாழன் தோறும் மதியம் ஆரத்திக்கு பின் கூட்டு பிரார்த்தனை நடைபெறும் . கூட்டு பிரார்த்தனையில் வேலை கிடைப்பதற்கும் . திருமணம் நடைபெறுவதற்கும் , உடல் ஆராக்கியம் உண்டாவதற்கும் , சாய் அடியார்கள் கூட்டாக பிரார்த்தனை செய்வார்கள் . கூட்டு பிரார்த்தனையில் வைக்கப்படும் கோரிக்கைகள் பாபாவால் நிறைவேற்றப்பட்ட பின் , பயன் அடைந்த சாய் அடியார்கள் நன்றி கூறுவதும் கூட்டு பிரார்த்தனையில் இடம்பெறும் .


பாபாவின் மகாசமாதி நாள் பூஜை :

வருடந்தோறும் விஜயதசமி அன்று சாய்பாபாவின் மகாசமாதி நாள் பூறுை நடைப்பெறும் . அன்று சாய் அடியார்கள் 500 நபர்கள் பால்குடம் சுமந்து தங்கள் கைகளால் சாய் பாபாவிற்கு அபிஷேகம் செய்வார்கள் . அன்றைய தினம் சிறப்பு சொற்பொழிவும் , மதியம் 2000 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும் .


அக்கல் கோட் ஒக்கராஜ் பிரதிஷ்டை:

இத்திருக்கோவிலில் அக்கல் கோட் மகாராஜா ஆன சுவாமி சமர்த்தர் 21 - 11 - ' 10 பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர் . சுவாமி சமர்தர் தன்னை நாடி வரும் பக்தர்களை கண்களை இமை காப்பது போல் காத்து வருகிறார் .


கஜனான் சுவாமி :

ஷே . காம் கஜனான் சுவாமி 18 - 3 - 2013 அன்று இத்திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டார் . அவர் தன் பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்து உண்மை பக்திக்கு மேன்மை அளித்து அருள் வழங்கி வருகிறார் .


அம்மன் வழிபாடு :

இத்திருக்கோவிலில் வழிபடும் பக்தர்களுக்கு சமர்த்தர், கஜானன் சுவாமி ஆகிய குருமார்களின் அருளோடு அம்மன் அருளும் கிடைக்கிறது . காஞ்சி காமாட்சி அம்மன் ரூபமாக இத்திருக்கோவிலில் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு அருள் வழங்குகிறார் ஆடிமாதம் மூன்றாம் ஞாயிறு அம்மனுக்கு கூழங் வாழ்த்தல் நிகழ்ச்சியும் , நவராத்திரியின் போது நாள்தோறும் சிறப்பு அலங்காரமும் நடைப்பெற்று வருகிறது .


சாய்பாபாவின் அற்புதங்கள் :

நம்பிக்கை பொறுமை என்ற வாக்கியத்தை கொண்ட சாய் பாபா தன்னை நம்பிய பக்தரை ஒருபோதும் ஏமாற்றியதில்லை . இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட சாய் பாபாவை நம்பி வழிபட்டவர்களின் வாழ்வில் பாபா எண்ணற்ற அற்புதங்கள் நிகழ்த்தி உள்ளார் .


நோயை தீர்க்கும் பாபா :

இந்த ஆலயத்தில் பக்தர்களின் பாது காவலராக இருக்கும் சாய் பாபா , பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறார் . அதிலும் நோயை விரட்டுவதில் வல்லவராக செயல்படுகிறார் . வேதாம்மா என்பவர் இங்கு பாபாவை வழிபடுபவர் , அவர் புற்றுநோயால் அவதிப்பட்ட போது பாபாவை வணங்கி வழிபட்டு நம்பிக்கையோடு இருந்தார் . அதன் பரிசாய் சாய்பாபா அவர் * நோயை குணப்படுத்தி மருத்துவர்கள் உட்பட அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் .


குழந்தை பாக்கியம் அருளிய சாய் பாபா :

இங்கு பாபாவை வணங்கிய குழந்தை இல்லா தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் அளித்து மகிழ்ச்சி அடைய செய்தார் மேலும் எண்ணற்ற அற்புதங்களையும் , லீல ) 6லகளையும் தினந்தோறும் பாபா இங்கு நிகழ்த்தி கொண்டு இருக்கிறார் .


பெளர்ணமி பூஜை :

மாதந்தோறும் பெளர்ணமி நாளில் மாலை 6 . 00 மணிக்கு சத்திய நாராயண பூஜை இங்கு நடத்தப்படுகிறது. அதில் கலந்து கொள்ளும் பக்தர்களையும் , தம்மீது நம்பிக்கை கொண்ட அடியாளர்களையும் பாபா எந்நாளும் காப்பாற்றி வருகிறார் .


ஆரத்தி நான்கு வேளை :

இக்கோயிலின் சிறப்பாக ஆரத்தி விளங்குகிறது . காலை , மதியம் , மாலை , இரவு என நான்கு வேளை ஆரத்தி தினந்தோறும் நடைபெறுகிறது.